நினைவஞ்சலி


-
10 Apr, 1935 - 04 May, 2015 (80 age)
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு மற்றும் நீயுஜேர்ச
-
பிறந்த இடம் : யாழ் வறுத்தலைவிளான்
யாழ் வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு மற்றும் நீயுஜேர்சி, அமெரிக்கா(USA) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜநாயகம் இராஜதேவா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி அன்னை மடியில்:-10.04.1935 இறைவன் அணைப்பில்:-04.05.2015 திதி:-தேய்பிறை பிரதமை :06 .05.2023 நீங்கள் எமமை விட்டு பிரிந்து எட்டாண்டு ஆன போதும் உம்மை நாங்கள் இழந்த துயரை ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்! கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம் கனவாகிப் போனதுவோ! எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால் துடித்து பதை பதைத்த நினைவுகளை இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா! எமை எல்லாம் அன்பால் அரவணைத்து பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள் எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும் மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம் வாழ்வில் என்றும் மறையாது உங்கள் நினைவு எம் மனதை விட்டு அகலாது உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! உங்கள் நினைவுடன் அன்பு மனைவி, பிள்ளைகள், மற்றும் பேரப்பிள்ளைகள் தகவல்:- மனைவி, அன்னாரின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி 06-05-2023ம் திகதி அன்று அவரின் ஞாபகமாக சுழிபுரம் சிவபூமி வயதோதிபர் இல்லத்தில் உள்ள வயதோதிபர்களுக்கு அன்றைய தினம் இரவு உணவு வழங்குவதற்கு அன்னாரான் மனைவி விமலா, மகன் அகிலன் ,மருமகள் சமித்தா பேரப்பிள்ளைகள் ஹரிணி, யுவன், சான்வி ஆகியோர் அனுசரணை வழங்கியுள்ளார்கள்